இயக்குநர் வெற்றிமாறன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் முதலில் சிறப்பு தோற்றத்தில் வரும் வகையில் எழுதப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு முழு நீளமாக வரும் வகையில் மாற்றினார் வெற்றிமாறன். இதனால் படப்பிடிப்பு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது. தவிர இதில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இரண்டு பாகமாக வெளியாகவிருக்கும் விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதற்கிடையே தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.