மூத்த நடிகை ஜமுனா உடல்நலக்குறைவால் காலமானார். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜமுனா. 1954-ம் ஆண்டு பணம் படுத்தும் பாடு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எல்.வி.பிரசாத் இயக்கிய மிஸ்ஸியம்மா படம் ஜமுனாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. 86 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நேற்றிரவு அவரது உயிர் பிரிந்தது. இதையறிந்த திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்தனர். ஜமுனாவின் உடல் இன்று காலை ஐதரபாத்தில் உள்ள ஃபிலிம் சேம்பருக்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்படுகிறது.