விஜய்யின் வாரிசு பட இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
2/ 11
ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் சத்தத்திற்கு மத்தியில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
3/ 11
இந்த விழாவில் விஜய், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
4/ 11
இந்த விழாவில் விஜய் ரசிகர்கள் சுமார் 8,000 க்கும் அதிகமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதனால் நேரு உள் விளையாட்டு அரங்கு நிறைந்து இருந்தது.
5/ 11
விழாவின் தொடக்கத்தில் வாரிசு பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் பேசினர். அவர்களின் பேச்சுகளுக்கு மத்தியில், வாரிசு படத்தில் இடம்பெறும் பாடல்களை சங்கர் மகாதேவன், கார்த்தி மானசி, தமன் உள்ளிட்ட கலைஞர்கள் லைவாக பாடினர்.
6/ 11
படக்குழுவினர் அனைவரும் பேசிய பிறகு விஜய் மேடை ஏறினார். அப்போது நடிகர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி பேசினார் விஜய். அதேபோல் இயக்குனர் வம்சியிடம் மறக்க முடியாத படத்தை கொடுத்ததற்கு நன்றி என தெரிவித்தார்.
7/ 11
"அண்ணனின் அன்பு; தனக்கு தானே போட்டியாளர்" என வழக்கம்போல் ரசிகர்களுக்கு குட்டிக் கதைகள் பல கூறினார்.
8/ 11
“தேவையான விமர்சனங்களும், தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மை ஓட வைத்துகொண்டு இருக்கிறது” என்றார் விஜய்.
9/ 11
மேடையில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
10/ 11
அதுமட்டுமின்றி, ரசிகர்களுக்கு மேடையில் இருந்தவாறு ரஞ்சிதமே ஸ்டைல் கிஸ் கொடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
11/ 11
மேலும் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக பவுலிங் போட்டுக்கொண்ட ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது ரசிகர்களை கவர்ந்தது.