அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் கார்த்திகேயா. இவருக்கு நேற்று ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது.
2/ 11
கார்த்திகேயா ஆந்திராவைச் சேர்ந்தவர். 2017-ல் வெளியான ப்ரேமதோ மீ கார்த்திக் என்ற படத்தில் அறிமுகமானார். அடுத்து நடித்த ஆர்எக்ஸ் 100 திரைப்படம் அவருக்கு பெயர் வாங்கித் தந்தது.
3/ 11
ஹிப்பி, கேங் லீடர், 90 எம்.எல் போன்ற படங்கள் கார்த்திகேயாவுக்கு தெலுங்கு திரையுலகில் ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தன.
4/ 11
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் வலிமை படத்தில் கார்த்திகேயா வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
5/ 11
இது அவரது முதல் தமிழ்ப் படமாகும். நேற்று அவர் கல்லூரியில் தன்னுடன் படித்த தனது நெடுநாளைய காதலி லோகிதாவை திருமணம் செய்து கொண்டார்.
6/ 11
இந்தத் திருமணத்தில் தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
7/ 11
முக்கியமாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர் கறுப்புநிற சட்டையும், வேட்டியும் அணிந்து ஐயப்ப பக்தர் தோற்றத்தில் வந்திருந்தார்.
8/ 11
தெலுங்கின் முக்கியமான தயாரிப்பாளர் அல்லு அரவிந்தும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
9/ 11
கார்த்திகேயா, லோகிதாவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
10/ 11
இது காதல் திருமணம். அதேநேரம் இருவீட்டார் சம்மதத்துடன் இந்தத் திருமணம் நடந்தது.
11/ 11
வலிமை படம் திரைக்கு வந்தால் கார்த்திகேயாவுக்கு அதிக தமிழ்ப் படங்கள் கிடைக்கும் என வலிமை படக்குழு கூறியுள்ளது.