பிறந்தநாளை முன்னிட்டு ஏழுமலையானை வழிபடுவதற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தார் த்ரிஷா. தொடர்ந்து இன்று காலை கோவிலுக்கு சென்ற அவர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவிலில் இருந்து வெளியில் வந்த திரிஷாவுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.