முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தளபதி 67: 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் - திரிஷா கூட்டணி!

தளபதி 67: 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் - திரிஷா கூட்டணி!

14 வருடங்களுக்கு பிறகு சென்சேஷனல் ஜோடி இந்தப் படத்துக்காக மீண்டும் இணையவுள்ளனர்.

 • 17

  தளபதி 67: 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் - திரிஷா கூட்டணி!

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முதல் நாள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அறிவிக்கப்பட்டனர்.

  MORE
  GALLERIES

 • 27

  தளபதி 67: 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் - திரிஷா கூட்டணி!

  அதன்படி இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டனர்.

  MORE
  GALLERIES

 • 37

  தளபதி 67: 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் - திரிஷா கூட்டணி!

  இந்த நிலையில் மற்ற நடிகர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்றைய முதல் அறிவிப்பாக திரிஷா இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 47

  தளபதி 67: 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் - திரிஷா கூட்டணி!

  தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்ட அறிவிப்பில், நீங்க கேட்ட அப்டேட் இதோ, 14 வருடங்களுக்கு பிறகு சென்சேஷனல் ஜோடி இந்தப் படத்துக்காக மீண்டும் இணையவுள்ளனர் என்று குறிப்பிட்டு, இருவரும் இதுவரை இருவரும் இணைந்து நடித்த படங்களின் வீடியோ கிளிப்பிங்ஸை பகிர்ந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 57

  தளபதி 67: 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் - திரிஷா கூட்டணி!

  விஜய் - திரிஷா இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என 4 படங்களில் ஜோடி சேர்ந்துள்ளனர். தற்போது 5வது முறையாக தளபதி 67 படத்துக்காக இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 67

  தளபதி 67: 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் - திரிஷா கூட்டணி!

  திரிஷா குந்தவையாக நடித்த பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி இதன் 2 ஆம் பாகம் வெளியாகவிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 77

  தளபதி 67: 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் - திரிஷா கூட்டணி!

  தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து திரிஷா தெரிவித்துள்ளதாவது, என்னுடைய விருப்பமானவர்கள், மிகத்திறமையான குழு பங்குபெற்றுள்ள இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES