ஜோஜி : எஞ்ஜினியரிங் டிராப் அவுட் ஆன ஹீரோ பகத் பாசில் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி திருப்பங்களே படத்தின் கதைக்களம்.
2/ 10
அய்யப்பனும் ஜோஷியும் : முன்னாள் ராணுவ அதிகாரி பிரித்விராஜான கோஷிக்கும், போலீஸ் அதிகாரி பிஜுமேனனான அய்யப்பனுக்கும் இடையிலான ஈகோ, தீப்பிடிக்கும் காட்சிகளாக திரையில் அமைந்தன.
3/ 10
மாலிக் : பொலிடிகல் த்ரில்லர் ஜேனரில் வெளிவந்த படம். பகத் பாசில் நடித்த இந்தப் படம் நாயகன், காட் ஃபாதர் சாயலில் சற்று இருக்கும்.
4/ 10
குருதி : பிரித்விராஜ், ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை மனு வாரியர் இயக்கியிருந்தார். உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடும்போது மனித உறவுகள் எப்படி மாறிப்போகின்றன என்பதே கதைக்களம்.
5/ 10
சீ யு சூன் : மகேஷ் நாராயணன் இயக்கிய இந்த படத்தில் பகத் பாசில், ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயமான பெண்ணைச் சுற்றி நடக்கும் மர்மங்களே படத்தின் கதை.
6/ 10
ஜோசப் : பத்ம குமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த படம். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தனது மனைவியின் மரணத்திற்கு பின்னர் ஒரு கிரிமினல் கேஸில் சிக்கி கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை.
7/ 10
ஹெலென் : நடிகை அன்னா பென் லீட் ரோலில் நடித்த படம். உறையும் குளிர் அறையில் சிக்கிக் கொண்ட நர்ஸ் தன் உயிரைக்காக நடத்தும் போராட்டமே ஹெலென்.
8/ 10
ஜல்லிக்கட்டு : சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளிவந்த படம். காளை மாட்டை பிடிக்க நடக்கும் போராட்டமே படத்தின் முக்கிய காட்சிகள். மேக்கிங்கிற்காக நாடு முழுவதும் பாராட்டைப் பெற்ற படம்.
9/ 10
அன்வேஷனம் : ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே படத்தின் காட்சிகள். 2020-ல் வெளிவந்த மிகச்சிறந்த க்ரைம் த்ரில்லர்
10/ 10
த்ரிஷ்யம் 2 : முதல் பாகமே அசரவைத்த நிலையில், இரண்டாம் பாகம் அதை விட பல மடங்கு அதிர்ச்சி தரும் அனுபவங்களை அளித்தது. த்ரில்லர் பட விரும்பிகள் தவற விடக்கூடாத படம்.