முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 2022-ல் அதிக வசூலை அள்ளிய படங்கள்!

2022-ல் அதிக வசூலை அள்ளிய படங்கள்!

2022 ஆம் ஆண்டு வெளியாகி டாப் கலெக்‌ஷன்ஸ் செய்த படங்கள் குறித்த முழு விவரம்..

 • News18
 • 17

  2022-ல் அதிக வசூலை அள்ளிய படங்கள்!

  கொரோனா லாக்டவுனில் திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்தோடு படங்கள் பார்க்க முடியாத சூல்நிலை ஏற்பட்டது. திரையரங்குகளில் படம் பார்ப்பதை பலரும் மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்தனர்.பின்பு கொரோனா குறைந்தவுடன் படிப்படியாக லாக்டவுன் விலக்கப்பட்டு திரையரங்குகளில் முன்னணி நடிகர்களின் படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் பாதிலேயே பல முன்னணி நடிகர்களின் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டுள்ளது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு வெளியாகி டாப் கலெக்‌ஷன்ஸ் செய்த படங்களின் பட்டியல் இதோ.

  MORE
  GALLERIES

 • 27

  2022-ல் அதிக வசூலை அள்ளிய படங்கள்!

  கே.ஜி.எஃப் 2 : உலக சினிமாவை இந்திய சினிமா நோக்கி திரும்பி பார்க்க வைத்த படமாக கே.ஜி.எஃப் 2 இருக்கிறது. கே.ஜி.எஃப் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. கே.ஜி.எஃப் 2 படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் அருமையாக இயக்கியிருந்தார். கே.ஜி.எஃப் 2 படம் உலகம் முழுவதும் ரூ.1240 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  2022-ல் அதிக வசூலை அள்ளிய படங்கள்!

  ஆர்ஆர்ஆர்: ராஜமவுளி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் மார்ச் மாதம் வெளியானது.இந்த படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  2022-ல் அதிக வசூலை அள்ளிய படங்கள்!

  விக்ரம் : ஜூன் 3 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் இன்று வரை திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான எந்த படத்துக்கும் கிடைக்காத வரவேற்பை விக்ரம் படம் பெற்றுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி என மூன்று முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். விக்ரம் படம் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஜூலை 8 ஆம் தேதி ரீலிஸாகவுள்ளது. விக்ரம் படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடியை நெருங்கி இன்னும் வசூல் செய்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  2022-ல் அதிக வசூலை அள்ளிய படங்கள்!

  பீஸ்ட் : நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியானது. இந்த படத்தின் மீது ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்தாலும் டாப் கலெக்‌ஷன் செய்த படங்களில் பீஸ்ட் படமும் இடம் பெற்றுள்ளது. பீஸ்ட் படம் இந்தியாவில் ரூ.169 கோடியும், உலகம் முழுவதும் ரூ.237 கோடியும் வசூல் செய்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 67

  2022-ல் அதிக வசூலை அள்ளிய படங்கள்!

  வலிமை :பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இந்தியாவில் ரூ.118 கோடியும், உலகம் முழுவதும் ரூ.153 கோடியும் வலிமை வசூல் செய்தது.

  MORE
  GALLERIES

 • 77

  2022-ல் அதிக வசூலை அள்ளிய படங்கள்!

  டான் : அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.டான் படம் உலகம் முழுவதும் ரூ.113 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது

  MORE
  GALLERIES