ப்ரே ( Prey ) இந்த ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான படங்களில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. டான் ட்ராக்டன்பெர்க் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு பேட்ரிக் ஐசன் கதை எழுதியுள்ளார். இதில்அம்பர் மிட்தண்டர், டகோட்டா பீவர்ஸ், டேன் டிலீக்ரோ, மைக்கேல் த்ரஷ், ஸ்டோர்மி கிப், ஜூலியன் பிளாக் ஆன்டெலோப் மற்றும் பென்னட் டெய்லர்ஆகியோர் நடித்துள்ளனர்.
நோப் (NOPE) ஒரு ஹாரர் திரைப்படமாகும், இந்தப் படத்தை ஜோர்டான் பீலே எழுதி, இயக்கி, தனது மங்கிபா புரொடக்ஷன்ஸ் கீழ் இணைந்து தயாரித்தார். இதில் டேனியல் கலுயா மற்றும் கேகே பால்மர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்டீவன் யூன், மைக்கேல் வின்காட், பிராண்டன் பெரியா மற்றும் கீத் டேவிட் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரிச்சர்ட் பீன் மற்றும் கிளைவ் கோல்மன் ஆகியோரின் திரைக்கதையுடன், ரோஜர் மைக்கேல் இயக்கிய நகைச்சுவை திரைப்படம் தி டியூக் (The Duke) . 1961 ஆம் ஆண்டு வெலிங்டன் பிரபுவின் உருவப்படம் திருடப்பட்டதைக் மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். இத்திரைப்படத்தில் ஜிம் பிராட்பென்ட், ஹெலன் மிர்ரன், ஃபியோன் வைட்ஹெட், அன்னா மேக்ஸ்வெல் மார்ட்டின் மற்றும் மேத்யூ கூட் ஆகியோர் நடித்துள்ளனர். இது 22 செப்டம்பர் 2021 அன்று மைக்கேல் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட அவர்து இறுதிப்படம் ஆகும்.
எக்ஸ் ( X ) என்பது 2022 ஆம் ஆண்டு டி வெஸ்ட் எழுதி, இயக்கி, தயாரித்து மற்றும் தொகுத்த திரைப்படமாகும். இதில் மியா கோத், ஜென்னா ஒர்டேகா, மார்ட்டின் ஹென்டர்சன், பிரிட்டானி ஸ்னோ, ஓவன் காம்ப்பெல், ஸ்டீபன் யூரே மற்றும் ஸ்காட் மெஸ்குடி ஆகியோர் இணைந்து தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். ஒரு வயதான தம்பதியினரின் கிராமப்புற இடத்தில் ஆபாசப் படம் எடுக்க வருபவர்கள் குறித்த கதையே இப்படம் ஆகும்.
தி பிளாக் ஃபோன் ( The Black Phone ) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் ஆகும். டெரிக்சன் மற்றும் சி. ராபர்ட் கார்கில் எழுதிய இந்தப் படத்தை ஸ்காட் டெரிக்சன் இயக்கியுள்ளார். இது 2004 ஆம் ஆண்டு ஜோ ஹில் எழுதிய சிறுகதையின் தழுவலாகும். இப்படத்தில் மேசன் தேம்ஸ், மேடலின் மெக்ரா, ஜெர்மி டேவிஸ், ஜேம்ஸ் ரான்சோன் மற்றும் ஈதன் ஹாக் ஆகியோர் நடித்துள்ளனர்.
பார்பேரியன் (Barbarian) இந்த ஆண்டு வெளியான திகில் திரைப்படமாகும், இந்தப் படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக சாக் க்ரெகர் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் அர்னான் மில்சன், ராய் லீ, ரஃபேல் மார்குல்ஸ் மற்றும் ஜே.டி. லிஃப்ஷிட்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஜார்ஜினா கேம்ப்பெல், பில் ஸ்கார்ஸ்கார்ட் மற்றும் ஜஸ்டின் லாங் ஆகியோர் நடித்துள்ளனர்.
தி பேட்மேன் (The Batman) என்பது டிசி காமிக்ஸ் கதாபாத்திரமான பேட்மேனை அடிப்படையாகக் கொண்ட சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். பீட்டர் கிரேக் திரைக்கதையை எழுதிய மேட் ரீவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ராபர்ட் பாட்டின்சன் புரூஸ் வெய்ன் / பேட்மேனாக ஜோ கிராவிட்ஸ், பால் டானோ, ஜெஃப்ரி ரைட், ஜான் டர்டுரோ, பீட்டர் சர்ஸ்கார்ட், ஆண்டி செர்கிஸ் மற்றும் கொலின் ஃபாரெல் ஆகியோர் நடித்துள்ளனர்.
டாப் கன் (Top Gun) மேவரிக் இந்த ஆண்டு வெளியான ஆக்ஷன் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை ஜோசப் கோசின்ஸ்கி இயக்கியுள்ளார். டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கோனெல்லி, ஜோன் ஹாம், க்லென் பாவெல், லீவிஸ் புல்மென், சார்லஸ் பார்னெல், பாஷீர் சலஹுதீன், மோனிகா பார்பரோ, ஜே எல்லீஸ், டானி ராமிரெஸ், க்ரெக் டார்சான் டேவிஸ், எட் ஹாரிஸ் மற்றும் வால் கில்மர் நடித்துள்ளனர்.