2022-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் ரன்பீர் கபூர் - ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரமாஸ்தரா முதலிடம் பிடித்துள்ளது. யஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கே.ஜி.எப் படத்தின் அடுத்த பாகமான கே.ஜி.எப் 2-க்கு இரண்டாமிடம். ரிலீஸானபோது மட்டுமல்லாமல் சமீபத்தில் கூட சர்ச்சையில் சிக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் 3-ம் இடம் பிடித்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான RRR படத்துக்கு நான்காமிடம். 5-ம் இடத்தில் கன்னடப் படமான காந்தாரா. அல்லு அர்ஜூனின் புஷ்பாவுக்கு 6-ம் இடம். லோகேஷ் கனகராஜ் - கமல் ஹாசன் கூட்டணியில் வெளியான விக்ரம் படத்துக்கு 7-வது இடம். 8-ம் இடத்தில் அமீர் கான், கரீனா கபூரின் லால் சிங் சத்தா. அஜய் தேவ்கன், ஷ்ரேயா சரண் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்துக்கு 9-வது இடம். மார்வெலின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோர்: லவ் அண்ட் தண்டர் படத்துக்கு 10-வது இடம்.