“நெஞ்சுக்கு நீதி”படத்தை பார்த்த தமிழ்நாடு முதல்வர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2/ 8
Zee Studios - போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
3/ 8
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார்.
6/ 8
படத்தை பார்த்த பின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்,
7/ 8
மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
8/ 8
சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.