விஜய் 66 படத்தின் தலைப்பு இதுதானா? இணையத்தில் வைரலாகும் பெயர்
விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இவர்களைத் தவிர சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விஜய் நடித்துவரும் 66வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பெயர் குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
2/ 8
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார்.
3/ 8
இதற்கான முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தினர்.அங்கு அன்னபூர்ணா ஸ்டுடியோவில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற்றது.
4/ 8
அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய விஜய் 66 படக்குழுவினர் கடந்த வாரம் முதல் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கினர். குறிப்பாக ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நடைபெற்று வருகிறது.
5/ 8
விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.
6/ 8
இவர்களைத் தவிர சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
7/ 8
அதேபோல் படத்திற்கு எஸ்.தமன் இசை அமைக்கிறார். இவர் இதுவரை விஜய் திரைப்படத்திற்கு இசை அமைத்தது கிடையாது. முதல் முறையாக தமிழில் விஜய் கூட்டணி அமைத்துள்ளனர்.
8/ 8
இந்நிலையில் படத்தின் பெயர் குறித்து சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி படத்தின் பெயர் தெலுங்கில் Vaarasudu - வாரசுடு, தமிழில் வாரிசு என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.