நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு... விதிமீறி போட்டோஷூட் நடத்தியதால் சர்ச்சை
திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி போட்டோசூட் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மலையில் நடைமுறையில் இருக்கும் விதிகளை மீறி செயல்பட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
2/ 10
திருமணம் முடிந்த பின் இன்று திருப்பதி மலைக்கு வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா தம்பதி ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்து கொண்டனர்.
3/ 10
அதன் பின் கோவிலுக்கு வெளியே வந்து அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று போட்டோசூட் நடத்தினர்.
4/ 10
இது தற்போது விவாதமாக மாறியுள்ளது. இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான நிர்வாகம் நடைபெற்ற தவறுக்கு யார் காரணம் என்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
5/ 10
இதுபற்றி செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பால்ரெட்டி ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி,நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர்,கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
6/ 10
மேலும் பெரிய அளவில் போட்டோ ஷூட் நடத்த தேவஸ்தானத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்கு முன் இது போல் யாரும் ஏழுமலையான் கோவில் முன் போட்டோஷூட் நடத்தியது கிடையாது.
7/ 10
எனவே இது பற்றி அவர்களிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
8/ 10
மேலும் அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த தவறி விட்டனர்.
9/ 10
எனவே அதற்கான காரணம் பற்றி அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
10/ 10
திருமணம் முடிந்த மறுநாளே விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.