துணிவு படக்குழுவினர் புரொமோஷனை தொடங்கியுள்ளனர். படத்தின் வால் போஸ்டர்கள் கவனம் ஈர்க்கின்றன. ஜோதி தியேட்டரால் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஃப்ளெக்ஸ் பேனர் விறுவிறுப்பாக அச்சடிக்கப்படும் துணிவு போஸ்டர்கள் பொங்கலையொட்டி துணிவு படம் ரிலீஸாக உள்ளது. தமிழ்நாட்டில் துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வால் போஸ்டர்கள் மாஸ்ஸாக இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர். துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். எச். வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.