முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்.. பிச்சைக்காரன் 2 முதல் விஜய் சேதுபதி படம் வரை!

தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்.. பிச்சைக்காரன் 2 முதல் விஜய் சேதுபதி படம் வரை!

தியேட்டரில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை (மே 19) சில படங்கள் வெளியாகவுள்ளன

  • 13

    தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்.. பிச்சைக்காரன் 2 முதல் விஜய் சேதுபதி படம் வரை!

    இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. படத்தில் விஜய் சேதுபதியுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் தவிர, நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக், சின்னி ஜெயந்த் என பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தை இசக்கி துரை தயாரித்துள்ளார். இந்தப் படம் நாளை (மே 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 23

    தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்.. பிச்சைக்காரன் 2 முதல் விஜய் சேதுபதி படம் வரை!

    இசையமைப்பாளராக  இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி, இயக்குனர் சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். 2016ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. இந்த நிலையில் பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டார். அதற்காக சில இயக்குனர்கள் இடமும் பேசினார். ஆனால் இறுதியில் நடிகர் விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை (மே 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 33

    தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்.. பிச்சைக்காரன் 2 முதல் விஜய் சேதுபதி படம் வரை!

    அதேபோல், ஹாலிவுட் ரசிகர்களுக்காக FAST X திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. வின் டீசல், ஜஸ்டின் லின், ஜேசன் மோமோ, அலன் ரிச்சசன் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஃபாஸ்ட் அன்ட் பியூரியஸ் படங்களின் சீரிஸ் வரிசையில் FAST X படமும் உருவாகியுள்ளதால், ஹாலிவுட் ரசிகர்களுக்கு தரமான ஆக்சன் ட்ரீட் கன்ஃபார்ம் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES