முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

அயோத்தி முதல் பீஃப் வரை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் முழு விவரம்

 • 110

  சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

  அயோத்தி (Ayothi) அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் வரும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் விபத்தில் இறக்கிறார். அந்தப் பெண்ணின் உடலை அயோத்தி எடுத்து செல்ல குடும்பத்தினரின் போராட்டமே அயோத்தி படத்தின் கதை. சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 210

  சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

  சுப்பா (Chupa)
  சிறுவன் ஒருவன் மெக்ஸிகோவில் உள்ள குடும்பத்தைக் காணவருகிறார். அப்போது தனது தாத்தாவின் பண்ணையில் காணப்படும் வித்தியாசமான உயிரினத்துடன் நட்பாகிறார். அதன் பின் நடக்கும் மாயாஜாலங்களே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் ஏப்ரல் 7 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 310

  சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

  பீஃப் (Beef)
  கான்டிராக்டர் ஒருவரும் தொழிலதிபரும் சாலையில் எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அதன் நடப்பவையே பீஃப் வெப் சீரிஸின் கதை. இந்த வெப் சீரிஸ் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 410

  சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

  பியோம்கேஷ் ஓ பிரஞ்சால் (Byomkesh O Piranjal)
  பியோம்கேஷ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. அவரது கதைகள் மேற்கு வங்கத்தில் சித்ரச்சோர் என்ற பெயரில் வெளியாகியிருந்தது. 1951 தொடங்கி 1970 வரை கதைகளை எழுதினார். அவரது கடைசிக் கதையான பிஷுபால் பாத் முடிவடையும் முன்பே இறந்துபோகிறார். இந்த வெப் சீரிஸ் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி Hoichoi ஓடிடியில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 510

  சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

  ஹங்கர் (Hunger)
  திறமையான சமையற் கலைஞரான பெண் தனது குடும்பத்தின் ரெஸ்டாரண்டை கவனித்து வருகிறார். அப்போது அவர் தனக்கு வரும் அழைப்பை ஏற்று செஃப் ஒருவரின் கீழ் பணிக்கு சேர்கிறார். அந்த செஃப் மிக மோசமானவர் என தெரியவருகிறது. அதன் பின் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடக்கும் மாற்றங்களே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 610

  சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

  ஜுப்ளி (Jubilee)
  அதிதி ராவ், வாமிகா, ராம் கபூர் உள்ளிட்டோர் நடித்ததுள்ள இந்த வெப் சீரிஸ் வரகிற ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகிறது. இந்த வெப் சீரிஸ் 1940 ,50களில் மும்பை திரையுலகில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 710

  சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

  ஓ பெலிந்தா (Oh Belinda)
  இளம் நடிகை பெலிந்தா ஷாம்பு விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். அந்த விளம்பர படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கதையில் இருப்பது எல்லாம் நிஜமாக நடக்கத் துவங்குகிறது. ஒரு மாய உலகில் சிக்கிக்கொள்கிறார். அதிலிருந்து அந்த நடிகை எப்படி மீண்டு வருகிறார் என்பதை இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 810

  சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

  ரோமாஞ்சம் (Romancham)
  பெங்களூரில் 7 நண்பர்கள் இணைந்து ஒரு இரவில் ஓஜா போர்டு கொண்டு விளையாடுகிறார்கள். அதன் பின் அவர்களுக்கு ஏற்படும் திரில்லிங்கான அனுபவமே ரோமாஞ்சம் படத்தின் கதை. இந்தப் படம் வருகிற 7 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 910

  சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

  தி கிராஸ் ஓவர் (The Crossover)
  பேஸ்கட் பால் விளையாடும் இரண்டு சகோதரர்கள் பற்றிய கதை. இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியானது.

  MORE
  GALLERIES

 • 1010

  சசிகுமாரின் அயோத்தி முதல் பீஃப் வரை ... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

  டிரான்ஸட்லான்டிக் (Transatlantic) கடந்த 1940களில் இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவை விட்டு வெளியேறும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிற அகதிகளுக்கு உதவ இரண்டு அமெரிக்கர்களும் அவர்களது கூட்டாளிகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அந்த முயற்சியில் வென்றார்களா என்பது தான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் ஏப்ரல் 7 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES