18 பேஜஸ் (18 Pages)
தெலுங்கில் நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வறன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இந்தப் படத்தின் கதையை எழுதியிருந்தார். பலன்டி சூர்ய பிரதாப் இயக்கிய இந்தப் படம் வருகிற 27 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கிறது.
ஆன் ஆக்சன் ஹீரோ (An Action Hero)
ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மானவ் என்ற புகழ்பெற்ற நடிகர் விபத்து ஒன்றில் சிக்கி தலைமறைவாகிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதை சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அனிருத் ஐயர். இந்தப் படம் வருகிற 27 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
அயலி (Ayali)
வீரபண்ணை என்ற கிராமத்தை சேர்ந்த தமிழ் செல்வி என்ற சிறுமி மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார். தனது கிராமத்தின் நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களைத் தகர்த்தெறிந்து எப்படி மருத்துவராகிறார் என்பதே வெப் சீரிஸின் கதை. முத்துக்குமார் எழுதியுள்ள இந்தத் தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், லிங்கா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற 26 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகிறது.
தி இன்விடேஷன்ஸ் (The Invitations)
தனது அம்மா இறந்த பிறகு டிஎன்ஏ பரிசோதனை செய்யும் ஈவி என்ற பெண் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதை தெரிந்துகொள்கிறார். இந்த நிலையில் தூரத்து உறவினர் ஒருவரின் திருமண அழைப்பிதழை ஏற்று அவரது வீட்டுக்கு ஈவிக்கு தனது குடும்பம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது. இந்த வெப் சீரிஸ் வருகிற 28 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.