தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்பு நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை இயக்கிவுள்ளார். அட்லி, ப்ரியாவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அட்லியின் மனைவியான ப்ரியா திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக ப்ரியா நடித்திருப்பார். ஆனால் திருமணத்திற்கு ப்ரியா எந்த படங்களில் நடிக்கவில்லை. ப்ரியா அடிக்கடி தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வார். அட்லி - ப்ரியாவின் க்யூட்டான புகைப்படம். ப்ரியாவின் முகத்தை மறைத்து அட்லி எடுத்த ரொமாண்டிக் புகைப்படம். திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்தும் அதே காதலில் அட்லி - ப்ரியா. கப்புல்ஸ்கே உரிய போஸில் அட்லி-ப்ரியா. ஆங்க்ரி பேடாக மொறைக்கும் ப்ரியாவை பார்த்து செல்லமாக சிரிக்கும் அட்லி.