இந்த நிலையில் தமிழ்நாட்டில் அந்த படத்தின், தமிழ் பதிப்பை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகளில் இன்று வெளியாக இருந்த தி கேரளா ஸ்டோரி படத்தின் தமிழ் பதிப்பு காட்சிகள் திரையிடப்படவில்லை. தமிழ்நாட்டில் ஹிந்தி பதிப்பு மட்டும் சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது.