நடிகர் விவேக் 17 ஏப்ரல் 2021 அன்று மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
2/ 9
தமிழ் சமூகத்திற்கு தனது பங்களிப்பை அதிகளவில் கொடுத்துள்ள விவேக், ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற கனவை மட்டும் நிறைவேற்றாமல் விட்டு விட்டார்.
3/ 9
சமீபத்தில் விவேக்கின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
4/ 9
அதன் பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விவேக்கின் மனைவி அருள்செல்வி, அவரது வீடு அமைந்த தெருவுக்கு தனது கணவரின் பெயரை வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
5/ 9
இந்த கோரிக்கையை ஏற்று தற்போது அந்த சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என தமிழக அரசு பெயரிட்டுள்ளது.
6/ 9
மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசளித்த அங்கீகாரம் குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், சமூக வலைதளங்களில் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
7/ 9
விவேக்கின் நிறைவேறாத கனவை நிறைவேற்றும் பொருட்டு, ஒரு கோடி மரக்கன்றை எட்டுவதற்காக பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
8/ 9
நடிகர் விவேக் நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி பிரபலம், பின்னணி பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் என பல முகங்களைக் கொண்டவர்.
9/ 9
கே பாலச்சந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விவேக், தமிழில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.