Home » photogallery » entertainment » CINEMA THE SHOOTING SPOT OF THE 66TH MOVIE STARRING VIJAY HAS BEEN RELEASED WHILE THE SHOOTING IS GOING ON AT OMR ROAD VIN
Vijay 66: வெளியானது விஜய் 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Thalapathy 66 | விஜய் 66 திரைப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் 20 நாட்கள் நடைபெறுகின்றது.
விஜய் நடித்துவரும் 66வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
2/ 10
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார்.
3/ 10
இதற்கான முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தினர்.
4/ 10
அங்கு அன்னபூர்ணா ஸ்டுடியோவில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற்றது. அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய விஜய் 66 படக்குழுவினர் திங்கட்கிழமை முதல் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கினர்.
5/ 10
குறிப்பாக ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள Hiranandani அப்பார்ட்மெண்டில் நடைபெற்று வருகிறது.
6/ 10
அங்கு நடைபெறும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
7/ 10
விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.
8/ 10
இவர்களைத் தவிர சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
9/ 10
அதேபோல் படத்திற்கு எஸ்.தமன் இசை அமைக்கிறார். இவர் இதுவரை விஜய் திரைப்படத்திற்கு இசை அமைத்தது கிடையாது. முதல் முறையாக தமிழில் விஜய் கூட்டணி அமைத்துள்ளனர்.
10/ 10
சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது.