கன்னட சினிமாத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் ரக்சித் ஷெட்டி. இவரது நடிப்பில் பல வித்தியாசமான படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் 777 சார்லி என்ற படம் ரக்சித் ஷெட்டியின் நடிப்பில், கிரண் ராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தமிழிலும் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துதால் திரையிடப்படும் திரைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டது. இந்தப் படம் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு இந்தப் பட்டியளில் பத்தாவது இடத்தை பெற்றுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதனை விஞ்சும் விதமாக படத்தின் திரைக்கதையும், மேக்கிங்கும், நடிகர்கள் வெளிப்படுத்திய அட்டகாசமான நடிப்பும் இருந்ததால் படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை பொன்னியின் செல்வன் ஏற்படுத்தியது. இந்தப் படம் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு இந்தப் பட்டியளில் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது.
ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்த படம் சீதா ராமம். இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இருந்தாலும் சீதா ராமம் திரைப்படத்தின் டப்பிங் நேரடி தமிழ் படம் போலே இருப்பதாக பாராட்டுக்கள் கிடைத்தன. அதேபோல் படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு இந்தப் பட்டியளில் எட்டாவது இடத்தை பெற்றுள்ளது.
மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த படம் மேஜர். தெலுங்கு, ஹிங்தி, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியான இந்தப் படத்தில் அதிவி, பிரகாஷ் ராஜ், ரேவதி, சாய், முரளி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தில் ஹீரோவான அதிவி இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியிருந்தார். இந்தப் படம் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு இந்தப் பட்டியளில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை மையமாக கொண்டு மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்த படம் 'ராக்கெட்ரி நம்பி விளைவு' . இந்த திரைப்படம் வெளியான போது சினிமா துறையினர், பிரபலங்கள் என ஏராளமானோர் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்தப் படம் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு இந்தப் பட்டியளில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.
ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனடிப்படையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மெதுவாக பயணத்தை தொடங்கிய காந்தாரா வசூல் வேட்டையையும் செய்தது. இந்தப் படம் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு இந்தப் பட்டியளில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்றது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட். தற்போது படம் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தியது. இந்நிலையில் கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் அதிக அளவுக்கு விக்ரம் படம் கலெக்சனை அள்ளியிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் இந்தப் படம் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு இந்தப் பட்டியளில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு இந்தப் பட்டியளில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி வெளியான இந்தப் படம் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு இந்தப் பட்டியளில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
பிரம்மாண்ட படங்களுக்குப் பெயர் போன இயக்குனரான எஸ் எஸ் ராஜமெளலியின் RRR இந்த ஆண்டுவெளியாகியது. இப்படம் இந்தியா முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இல்லாமல், நெட்பிளிக்ஸில் வெளியாகி மேற்கு உலக நாடுகளிலும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் அலியா பட் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு இந்தப் பட்டியளில் முதலிடத்தை RRR படம் பெற்றுள்ளது.