Home » photogallery » entertainment » CINEMA THE NEW PHOTOS OF MOVIE ETHARKKUM THUNINDHAVAN STARRING SURIYA IN THE PANDYARAJ DIRECTION HAVE BEEN RELEASED VIN JBR
எதற்கும் துணிந்தவன் படத்தின் அட்டகாசமான புகைப்படங்கள்...!
Suriya: கொரோனா அதிகரிப்பால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய திரைப்படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளி வைத்தன.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் அட்டகாசமான புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
2/ 12
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய்பீம், சூரரைப்போற்று இரண்டும் திரையரங்குகளுக்கு பதில் நேரடியாக ஓடிடி இல் வெளியாகின. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
3/ 12
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படமாக எதற்கும் துணிந்தவன் வெளியாகிறது.
4/ 12
2022 பிப்ரவரி 4-ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.
5/ 12
கொரோனா அதிகரிப்பால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய திரைப்படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளி வைத்தன.
6/ 12
அதனால் பிப்ரவரியில் வெளியாக வேண்டிய எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தையும் தள்ளி வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
7/ 12
இதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
8/ 12
தமிழகத்தில் இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது.
9/ 12
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படத்தை வெளியிடுகின்றனர்.
10/ 12
படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார்.
11/ 12
அவர்களுடன் வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
12/ 12
டி இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழக திரையரங்குகளில் இத்திரைப்படம் 80 கோடியை தாண்டி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.