3 கோடி ரூபாய் மதிப்புள்ள கோல்கொண்டா வைரத்தை ஆர்.எஸ்.மனோகர் கடத்த திட்டமிடுகிறார். அதற்கு ஒரு ஆளை நியமிக்கிறார். அவனோ, வைரத்தை தான் சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறான். இதனை அறிந்து கொள்ளும் ஆர்.எஸ்..மனோகர். அவனை கொன்று வைரத்தை எடுத்துவர தனது அடியாள் ஸ்ரீகாந்த் தலைமையில் ஆள்களை அனுப்புகிறார். ஸ்ரீகாந்தின் கத்தி வீச்சில் அவன் படுகாயமடைகிறான். ஆனால், வைரத்தை அவர்களால் கைப்பற்ற முடியாமல் போகிறது.
காயமடைந்தவன், வைரம் இருக்கும் இடம் குறித்து ஒரு குறிப்பை எழுதிவிட்டு இறந்து போகிறான். அவன் காயம்பட்டு கிடந்தவேளை அவனை காப்பாற்ற நினைத்த முதியவரை, அவனை கொலை செய்ததாக தவறாக குற்றம் சுமத்தி சிறைக்கு அனுப்புகிறார்கள். அவரது மகள் ஜெயலலிதா ஆண் வேடம் அணிந்து தந்தை செய்து வந்த குதிரை வண்டி ஓட்டும் தொழிலை செய்ய ஆரம்பிக்கிறார். புகைப்படத்தில் ஆண் வேடத்தில் இருப்பது அவர்தான்.
தனது தந்தை சிறைக்குச் செல்ல காரணம் ஸ்ரீகாந்த் என்பதை அறிந்து கொள்ளும் ஜெயலலிதா, அவரை மாட்ட வைப்பதற்காக மழை நாளில் உடைகளை கிழித்துக் கொண்டு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய துரத்துவதாக ஸ்ரீகாந்த் வீட்டில் தஞ்சம் அடைவார். அங்கு குட்டையான உடை அணிந்து பாட்டுப்பாடி ஸ்ரீகாந்தை மயக்க முயல்வார். இன்றைய நாயகிகளே போடத் தயங்கும் அளவுக்கு உடை இருக்கும்.