தி லெஜெண்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் ஊர்வசி ரவுத்தலா இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஊர்வசி. ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி வரை ஊர்வசி ரவுத்தலா சம்பளம் வாங்குவதாக தகவல் தி லெஜெண்ட் படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஊர்வசி. கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி, சனம் ரே உள்ளிட்ட ஊர்வசியின் படங்கள் வரவேற்பை பெற்றன. தி லெஜெண்ட் படத்தில் டூயட் பாடலுக்கு சரவணனுடன் இணைந்து ஆடியுள்ளார் ஊர்வசி ரவுத்தலா. சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்த தி லெஜெண்ட் பட புரொமோஷனில் ஆர்வத்துடன் பங்கேற்றார். இன்ஸ்டாகிராமில் ஊர்வசியை 5.30 கோடிப்பேர் ஃபாலோ செய்கின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் ஊர்வசி. தமிழில் ஊர்வசி ரவுத்தலா தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.