முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

1985 ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி முதல் மரியாதை திரைக்கு வந்தது. நேற்றுடன் 37 வருடங்களை நிறைவு செய்து இன்று 38 வது வருடத்துக்குள் நுழைகிறது. இன்றுதான் இதன் கதாசிரியர் ஆர்.செல்வராஜ் தனது 76 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

  • News18
  • 19

    முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

    1985 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் மரியாதை வெளியானது. பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி, ராதா, வடிவுக்கரசி, ரஞ்சனி, சத்யராஜ், ஜனகராஜ் என பலர் நடித்தது. இளையராஜாவின் இசையையும், வைரமுத்துவின் பாடல்களையும், பி.கண்ணனின் ஒளிப்பதிவையும் சொல்லாமல் முதல் மரியாதை குறித்த பேச்சு நிறைவு பெறாது. இன்னொருவர் கதாசிரியர் ஆர்.செல்வராஜ்.

    MORE
    GALLERIES

  • 29

    முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

    இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி படத்தின் கதையை எழுதியவர் ஆர்.செல்வராஜ். அதற்கு முன் எங்கம்மா சபதம் படத்துக்கு கதை எழுதியிருந்தார். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் கதை, கிழக்கே போகும் ரயில், பாக்யராஜின் புதிய வார்ப்புகள், புதுமைப் பெண், மணிரத்னத்தின் இதய கோவில், உதயகீதம், முதல் மரியாதை, பாடு நிலாவே, கொடி பறக்குது, புது நெல்லு புது நாத்து, சின்னக் கவுண்டர், கேப்டன் மகள், சக்கரைதேவன், கோயில்காளை,  ராசைய்யா, அந்திமந்தாரை என திரையில் நாம் ரசித்த, கண்ணீர்சிந்திய முக்கியமான திரைப்படங்களுக்கு ஆர்.செல்வராஜ்தான் கதாசிரியர். தொடர்ச்சியாக படங்கள் தோல்வியடைந்த நிலையில் மணிரத்னம் இவரது அலைபாயுதே கதையை இயக்கித்தான் மீண்டும் தனது வெற்றியின் பாதைக்கு திரும்பினார்.

    MORE
    GALLERIES

  • 39

    முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

    முதல் மரியாதை படத்தின் கதைக்கான விதை விழுந்தது பாரதிராஜாவிடம். அன் ஓல்ட் பெயின்ட்ர் அண்ட் ஏ யங் கேர்ள் படத்தில் வயதான பெயின்டருக்கும், இளம் பெண்ணுக்குமான காதல் சொல்லப்பட்டிருக்கும். இந்த கதை பாரதிராஜாவுக்குப் பிடித்துப்போனது. ஜெயகாந்தனின் சமூகம் என்பது நாலு பேர் கதையில், திருமண உறவு சரியாக அமையாத ஆணுக்கும், அவ்வூருக்கு புதிதாக வரும் ஆசிரியையக்கும் நடுவில் ஒரு காதல் உருவாகும். இந்த இரண்டு கதைகளையும் அவர் ஆர்.செல்வராஜிடம் சொல்ல, கிராமத்துப் பின்னணியில் அதனை அழக்காக கோர்த்து காட்சிகளால் செறிவூட்டி தந்ததுதான் முதல் மரியாதை எனும் காவியம்.

    MORE
    GALLERIES

  • 49

    முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

    இதில் சிவாஜி நடித்த மலைச்சாமி வேடத்தில் ராஜேஷை நடிக்க வைப்பதாக இருந்தார் பாரதிராஜா. விநியோகஸ்தர்களுக்கு இந்த முடிவு பிடிக்கவில்லை. அதனால், பாடகர் பாலசுப்பிரமணியத்தை நடிக்க வைக்கலாம் என நினைத்தார் பாரதிராஜா. அந்த நேரத்தில் அவர் பிஸியாக பாடிக் கொண்டிருந்ததால் மூன்றாவது வாய்ப்பாக சிவாஜியிடம் சென்றார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சிவாஜி.

    MORE
    GALLERIES

  • 59

    முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

    அதேபோல் ராதா நடித்த குயில் வேடத்தில் ராதிகாவைதான் முதலில் அணுகினார் பாரதிராஜா. ராதிகா கே.விஸ்வநாத்தின் ஸ்வாதி முத்யம் (தமிழில் சிப்பிக்குள் முத்து) படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால் முதல் மரியாதையில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகே ராதாவை பாரதிராஜா தேர்வு செய்தார். ராதாவுக்கு படத்தில் ராதிகாதான் டப்பிங் பேசியிருப்பார். சிங்கப்பூரைச் சேர்ந்த சாஷா செல்வராiஜுக்கு ரஞ்சனி என பெயர் சூட்டி முதல் மரியாதையில் இன்னொரு இளம் ஜோடியாக நடிக்க வைத்தார்.

    MORE
    GALLERIES

  • 69

    முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

    முதியவர் ஒருவருக்கு இளம்பெண்ணிடம் வரும் காதல்தான் முதல் மரியாதை படத்தின் கதை. அந்த முதியவர் யார்? ஏன் அவருக்கு அப்பெண்ணின் மீது காதல் வருகிறது, அவர்களின் பின்னணி கதை என்ன என்பதை உணர்வுப்பூர்வமாக பின்னியிருந்தார் கதாசிரியர் ஆர்.செல்வராஜ். இளையராஜா அதனை தனது இசையில் இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றார்.

    MORE
    GALLERIES

  • 79

    முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

    கதாபாத்திரங்களின் உணர்வுகளை அப்படியே வார்த்தைகளில் வடித்துத் தந்தார் வைரமுத்து. கதாசிரியர், இயக்குநர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என அனைவரும் இயைந்து ஒத்த உணர்வுடன் ஒரு படைப்பை தந்தால் அது எப்படியிருக்கும் என்பதற்கு உதாரணமாக இன்றும் திகழ்கிறது முதல் மரியாதை திரைப்படம்.

    MORE
    GALLERIES

  • 89

    முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

    1985 ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி முதல் மரியாதை திரைக்கு வந்தது. நேற்றுடன் 37 வருடங்களை நிறைவு செய்து இன்று 38 வது வருடத்துக்குள் நுழைகிறது. இன்றுதான் இதன் கதாசிரியர் ஆர்.செல்வராஜ் தனது 76 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    MORE
    GALLERIES

  • 99

    முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

    ஆகஸ்ட் 15 வெளியான முதல் மரியாதை தீபாவளியை தாண்டி ஓடியது. தீபாவளிக்கு பாலசந்தரின் சிந்துபைரவி திரைக்கு வந்தது. முதல் மரியாதையா, சிந்துபைரவியா எது மக்களின் மனதை அதிகம் கொள்ளை கொள்ளப் போகிறது என்று பத்திரிகைகள் எழுதின. சிந்துபைரவியிலும் கிட்டத்தட்ட இதேபோன்ற கதைதான். இளையராஜாவின் பாடல்களும், இசையும் முதல் மரியாதைப் போலவே ஹிட். எனினும் கிராமத்து மணம் கமழ பாரதிராஜா உருவாக்கி அளித்த முதல் மரியாதை நூலிழையில் முந்திக் கொண்டது. இன்று பார்க்கையில் சிகரத்தைவிட இமயத்தின் முதல் மரியாதை துலக்கமாகவே உள்ளது.

    MORE
    GALLERIES