முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » முதல் ஆவணப்படத்திற்கே ஆஸ்கர் விருது... நெகிழ்ச்சியை பகிர்ந்த இயக்குனர் கார்த்திகி..!

முதல் ஆவணப்படத்திற்கே ஆஸ்கர் விருது... நெகிழ்ச்சியை பகிர்ந்த இயக்குனர் கார்த்திகி..!

The elephant whispers director | பொம்மன், பெல்லியின் எளிமையான வாழ்க்கையும், அவர்கள் யானை வளர்ப்பதில் காட்டும் ஆர்வம் என அனைத்துமே என்னை வியப்படைய வைத்துள்ளது - இயக்குனர் கார்த்திகி.

 • 16

  முதல் ஆவணப்படத்திற்கே ஆஸ்கர் விருது... நெகிழ்ச்சியை பகிர்ந்த இயக்குனர் கார்த்திகி..!

  ஆஸ்கர் விருதை வென்று சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது தி எலிபன்ட் விஸ்பரர் ஆவண குறும்படம்.

  MORE
  GALLERIES

 • 26

  முதல் ஆவணப்படத்திற்கே ஆஸ்கர் விருது... நெகிழ்ச்சியை பகிர்ந்த இயக்குனர் கார்த்திகி..!

  முதுமலை வனப்பகுதியில் உள்ள தெப்பக்காடு என்ற கிராமத்தில் படமாக்க பட்டது இந்த எலிபன்ட் விஸ்பரர் ஆவணப்படம்.

  MORE
  GALLERIES

 • 36

  முதல் ஆவணப்படத்திற்கே ஆஸ்கர் விருது... நெகிழ்ச்சியை பகிர்ந்த இயக்குனர் கார்த்திகி..!

  யானைகளுக்காக வைக்கப்படும் மின்வேலியில் சிக்கிக் கொள்ளும் குட்டி யானையான ரகு மற்றும் அம்மு ஆகிய இரண்டு குட்டி யானைகளை பொம்மன் மற்றும் பெல்லி என்ற மலைவாழ் தம்பதி வளர்த்து வேறு பாகனிடம் கொடுக்கும் வரை அந்த யானை குட்டிகளுக்கும் பொம்மன் பெல்லி தம்பதிக்கும் இடையே உள்ள பாச போராட்டங்களை விளக்கும் வண்ணம் இந்த ஆவணப்படம் உருவாகி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  முதல் ஆவணப்படத்திற்கே ஆஸ்கர் விருது... நெகிழ்ச்சியை பகிர்ந்த இயக்குனர் கார்த்திகி..!

  ஊட்டியில் பிறந்து கோவையில் கல்லூரி படிப்பை முடித்த Kartiki Gonsalves என்ற பெண் ஆவணப்பட இயக்குனரின் முதல் ஆவணப்படத்திற்கே ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் பெருமையான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  முதல் ஆவணப்படத்திற்கே ஆஸ்கர் விருது... நெகிழ்ச்சியை பகிர்ந்த இயக்குனர் கார்த்திகி..!

  இதுகுறித்து பேசிய இயக்குனர் கார்த்திகி, எனது முதல் ஆவணப்படத்திற்கே ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள பிணைப்பே இந்த படத்தை எடுக்க எனக்கு உந்துதலாக இருந்தது  என்றார்.

  MORE
  GALLERIES

 • 66

  முதல் ஆவணப்படத்திற்கே ஆஸ்கர் விருது... நெகிழ்ச்சியை பகிர்ந்த இயக்குனர் கார்த்திகி..!

  ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து பொம்மனும், பெல்லியும் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். இதன் மூலம் அவர்களுக்கு ரசிகர்கள் கூடிவிட்டார்கள். உலகம் முழுவதும் உள்ள உள்ள மக்கள் அவர்களுக்கு தெரிவிக்கும் வாழ்த்துக்களை நான் அவர்களிடம் சேர்க்க வேண்டும், விலங்குகளை வேறு மாதிரி பாவிக்காமல் நம்மில் ஒருவராக பார்க்க வேண்டும் என்பதே எனது கருத்து என தெரிவித்தார்.

  MORE
  GALLERIES