சின்னத்திரை பிரபலங்கள் பிரிட்டோ - சந்தியா ராமச்சந்திரன் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளனர். ‘ராஜா ராணி 2’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் பிரிட்டோ விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். 'தவமாய் தவமிருந்து' சீரியலில் தன்னுடன் திரையைப் பகிர்ந்து கொண்ட நடிகை சந்தியாவை அவர் திருமணம் செய்துக் கொள்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி 25-ம் தேதி நடைபெற்றது. சந்தியா ராமச்சந்திரன் தங்கள் நிச்சயதார்த்த விழாவில் எடுத்துக் கொண்ட ஒரு படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். பிரிட்டோ, 'அரசியல்ல இது எல்லாம் சதாரணமப்பா' என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். முதலில் 'கோகுலத்தில் சீதை' சீரியலில் நடித்த சந்தியா, பின்னர் 'தெய்வம் தந்த பூவே' சீரியலில் நடித்தார். அதோடு சில படங்களிலும் நடித்துள்ளார்.