தங்கலான் படத்தின் புதிய படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகர் விக்ரம். சியான் விக்ரம் தற்போது தங்கலான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இந்தப் படத்தின் மூலம் கைகோர்த்திருக்கிறார். இது ஒரு பீரியட் படமாக உருவாகிறது. படத்தில் விக்ரமுடன் இணைந்து பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தங்கலான் படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில் தற்போது தங்கலான் படத்தின் புதிய படங்களை பகிர்ந்துள்ளார் விக்ரம். அந்தப் படங்களுக்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகின்றன.