வாரிசு திரைப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பூ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் குடும்ப உறவுகளை மையபடுத்திய ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ளது.