தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் அவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இதையடுத்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். விஜய்யின் 50-வது படமாக சுறா வெளியாகியிருந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை எஸ்.பி.ராஜ் குமார் என்பவர் இயக்கியிருந்தார். இதில் விஜய்யுடன் இணைந்து தமன்னா, வடிவேலு ஆகியவர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக சுறா படத்தில் வரும் வடிவேலு - விஜய் காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த சுறா திரைப்படம், விஜய்யின் 50-வது படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் படம் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இதனால் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவியது சுறா. இந்நிலையில் சுறா படத்தின் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் மட்டும் விஜய்யின் சுறா திரைப்படம் ரூ.10 கோடி வசூல் செய்ததாம். அந்தப் படத்திற்குப் பிறகு பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுகளை கொடுத்துவிட்டார் விஜய்.