நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. விஜய் தனது திரை வாழ்க்கையில் தவற விட்ட பல படங்களில் வேறு நடிகர் நடித்து, பிளாக்பஸ்டர் ஹிட்டாகியிருக்கின்றன. அந்த வகையில் சண்டக்கோழி படத்தின் கதையை இயக்குநர் லிங்குசாமி, முதலில் விஜய்யிடம் தான் கூறினாராம். ஆனால் படத்தின் முதல் பாதியைக் கேட்ட விஜய், வேண்டாம் என தவிர்த்து விட்டாராம். அந்தக் கதையில் விஷால் நடித்து, சண்டக்கோழி படமும் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் ஒருநாள் விஜய்யை ஹோட்டலில் சந்தித்த லிங்குசாமி, அந்தக் கதையை வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்களே என்றாராம். அதற்கு விஜய் அந்த கதைக்கு இந்த பையன் (விஷால்) தான் கரெக்ட்டான சாய்ஸ், திரையுலகிற்கு இப்படியொருவர் வரணும்னு இருக்கு என்று கூறி புன்னகைத்தாராம்.