ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Thalapathy Vijay: தீவிர விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த விஷயங்கள் தெரியும்!

Thalapathy Vijay: தீவிர விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த விஷயங்கள் தெரியும்!

ஒன்பது வயதில் காலமான தனது மறைந்த சகோதரி வித்யாவிடம் விஜய் மிகவும் அன்பு கொண்டிருந்தார்.

 • 17

  Thalapathy Vijay: தீவிர விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த விஷயங்கள் தெரியும்!

  விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக இருந்தவர். அவர் தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 1984 முதல் 1988 வரை குழந்தை நட்சத்திரமாக இருந்த விஜய், 1992-ல் நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 27

  Thalapathy Vijay: தீவிர விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த விஷயங்கள் தெரியும்!

  விஜய் ஒரு பெரிய மனிதநேயவாதி. ஒவ்வொரு ஆண்டும் நடிகர் தனது ஊதியத்தில் ஒரு பகுதியை பின் தங்கியோரின் கல்விக்காக செலவிடுகிறார். தனது விஜய் மக்கள் இயக்கம் அறக்கட்டளை மூலம் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட நலப்பணிகளை செய்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 37

  Thalapathy Vijay: தீவிர விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த விஷயங்கள் தெரியும்!

  தான் ரஜினி ரசிகன் என்று விஜய் பலமுறை வாக்குமூலம் அளித்துள்ளார். உண்மையில், விஜய் நடிகராக மாறுவதற்கு ரஜினி பெரிய உத்வேகமாக இருந்தார். அண்ணாமலை பட வசனத்தை பேசிக்காட்டி தான் விஜய் நடிப்பிற்கு பிள்ளையார் சுழி போட்டதாகவும் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  Thalapathy Vijay: தீவிர விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த விஷயங்கள் தெரியும்!

  ஒன்பது வயதில் காலமான தனது மறைந்த சகோதரி வித்யாவிடம் விஜய் மிகவும் அன்பு கொண்டிருந்தார். அவர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு வி.வி. புரொடக்‌ஷன்ஸ் எனப் பெயரிட்டுள்ளார். வித்யா-விஜய் புரொடக்ஷன்ஸ் என்பது தான் இதன் அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 57

  Thalapathy Vijay: தீவிர விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த விஷயங்கள் தெரியும்!

  பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் ரவுடி ரத்தோரின் 'சின் தா தா' பாடலில் தளபதி விஜய் நடனமாடியுள்ளார். அக்ஷய் குமார் விஜய்யின் துப்பாக்கி படத்தின் ரீமேக்கான, ஹாலிடே: எ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டூட்டி படத்தில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 67

  Thalapathy Vijay: தீவிர விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த விஷயங்கள் தெரியும்!

  கேரளாவில் மலையாளம் அல்லாத ஒரு நடிகர் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் என்றால், அது விஜய் தான். அவரின் படங்கள் அங்கு நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. உண்மையில், அவரது தெறி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, அது ஒரு சில மலையாளப் படங்களின் சாதனைகளையும் முறியடித்தது.

  MORE
  GALLERIES

 • 77

  Thalapathy Vijay: தீவிர விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த விஷயங்கள் தெரியும்!

  மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றார் விஜய். அவருக்கு 1998-ல் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது. அதாவது தொழில்துறையில் நுழைந்த ஆறு ஆண்டுகளுக்குள் விஜய் இந்த விருதைப் பெற்றார்.

  MORE
  GALLERIES