விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்த் இணைந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது. தளபதி 67 படத்தில் இடம்பெறும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டு வருகிறது. இதில் நடிகை ப்ரியா ஆனந்த் இடம்பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2009-ல் வெளியான வாமனன் படத்தில் ப்ரியா ஆனந்த் அறிமுகம் ஆனார். எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, எல்கேஜி படங்களின் கவனம் ஈர்த்தார் பிரியா ஆனந்த். தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். முதல் கட்டமாக இந்த படத்தின் ஷூட்டிங் 60 நாட்களுக்கு காஷ்மீரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி த்ரிஷா உள்பட படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 2008-ல் வெளியான குருவி படத்திற்கு பின்னர் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைகிறார் த்ரிஷா.