முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஐந்தாவது முறை விஜய்யுடன் இணையும் த்ரிஷா! முந்தைய படங்கள் என்னென்ன தெரியுமா?

ஐந்தாவது முறை விஜய்யுடன் இணையும் த்ரிஷா! முந்தைய படங்கள் என்னென்ன தெரியுமா?

குருவி படத்துக்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் - த்ரிஷா தளபதி 67 படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

 • 18

  ஐந்தாவது முறை விஜய்யுடன் இணையும் த்ரிஷா! முந்தைய படங்கள் என்னென்ன தெரியுமா?

  நடிகர் விஜய்யின் 67-வது படமான தளபதி 67 படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஹிட் காம்போ என இவர்களை சொல்லலாம். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருப்பதும் மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளியான முந்தைய படங்களை இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  ஐந்தாவது முறை விஜய்யுடன் இணையும் த்ரிஷா! முந்தைய படங்கள் என்னென்ன தெரியுமா?

  ஒக்கடு படத்தின் ரீமேக்கான கில்லி படத்தை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். கபடி வீரராக விஜய், பிரகாஷ் ராஜிடமிருந்து தப்பித்து அவரிடம் தஞ்சமடையும் தனலட்சுமியாக த்ரிஷா இருவருமே நடிப்பில் அசத்தியிருப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 38

  ஐந்தாவது முறை விஜய்யுடன் இணையும் த்ரிஷா! முந்தைய படங்கள் என்னென்ன தெரியுமா?

  2004, ஏப்ரல் 17-ம் தேதி வெளியான இப்படம் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வசூலித்தது. இன்றும் பலரின் ஃபேவரிட் படமாக இருக்கிறது கில்லி!

  MORE
  GALLERIES

 • 48

  ஐந்தாவது முறை விஜய்யுடன் இணையும் த்ரிஷா! முந்தைய படங்கள் என்னென்ன தெரியுமா?

  2005 பொங்கலை முன்னிட்டு அந்தாண்டு ஜனவரி 14-ம் தேதி வெளியானது விஜய் - த்ரிஷாவின் திருப்பாச்சி. பேரரசு இயக்கிய இந்தப் படம் அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 58

  ஐந்தாவது முறை விஜய்யுடன் இணையும் த்ரிஷா! முந்தைய படங்கள் என்னென்ன தெரியுமா?

  சரத்குமாரின் ஐயா, தனுஷின் தேவதையைக் கண்டேன் ஆகியப் படங்களுடன் வெளியான திருப்பாச்சி, 112 திரையரங்குகளில் 100 நாட்களையும், தமிழ்நாட்டில் மொத்தமாக 200 நாட்களையும் நிறைவு செய்தது.

  MORE
  GALLERIES

 • 68

  ஐந்தாவது முறை விஜய்யுடன் இணையும் த்ரிஷா! முந்தைய படங்கள் என்னென்ன தெரியுமா?

  த்ரிஷாவும் - விஜய்யும் மூன்றாவது முறையாக திரையில் இணைந்த படம் தான் ஆதி. ரமணா இயக்கிய இப்படம் 2006 (ஜனவரி 15) பொங்கலுக்கு வெளியானது. ஆனால் விஜய் - த்ரிஷா கூட்டணியின் முந்தையப் படங்களான கில்லி, திருப்பாச்சியைப் போல இப்படம் வெற்றி பெறவில்லை.

  MORE
  GALLERIES

 • 78

  ஐந்தாவது முறை விஜய்யுடன் இணையும் த்ரிஷா! முந்தைய படங்கள் என்னென்ன தெரியுமா?

  2008 கோடையை மையைப்படுத்தி மே 8-ம் தேதி வெளியானப் படம் குருவி. கில்லி படத்திற்குப் பிறகு மீண்டும் அதே நடிகர்களை வைத்து குருவியை இயக்கினார் தரணி. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

  MORE
  GALLERIES

 • 88

  ஐந்தாவது முறை விஜய்யுடன் இணையும் த்ரிஷா! முந்தைய படங்கள் என்னென்ன தெரியுமா?

  குருவி படத்துக்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் - த்ரிஷா தளபதி 67 படத்தில் இணைந்திருக்கிறார்கள். ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் இந்த கூட்டணி மூலம் அதை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

  MORE
  GALLERIES