நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் பூஜை படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
2/ 12
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
3/ 12
விக்ரம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - லோகேஷ் இணைவதாக செய்திகள் வெளியாகின. இதனை இயக்குநரும் பல இடங்களில் உறுதிப்படுத்தினார்.
4/ 12
சில தினங்கள் முன்பு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தளபதி 67 என்றழைக்கப்படும் இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
5/ 12
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், நடிகைகள் த்ரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோரும் தளபதி 67-ல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6/ 12
14 வருடத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிக்கிறார் த்ரிஷா.
7/ 12
இவர்கள் இருவரையும் மீண்டும் திரையில் பார்ப்பதில் இப்போதே உற்சாகமாகியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
8/ 12
தளபதி 67 படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
9/ 12
இப்படத்தின் பூஜை கடந்த டிசம்பர் முதல் வாரத்திலேயே முடிவடைந்து, படப்பிடிப்பும் ஆரம்பமானது.
10/ 12
நேற்று தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டனர் படக்குழுவினர்.
11/ 12
இதையடுத்து அந்தப் படங்களும் வெளியாகின.
12/ 12
அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.
112
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விஜய் - லோகேஷ் கனகராஜ்... வைரலாகும் தளபதி 67 பூஜை படங்கள்!