முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பூஜையுடன் தொடங்கிய தலைநகரம் 2 - படங்கள்!

பூஜையுடன் தொடங்கிய தலைநகரம் 2 - படங்கள்!

இந்த இரண்டாம் பாகத்தில் சுந்தர் சி. தவிர அனைவரும் புதியவர்கள். படத்தை சுந்தர் சி. யை வைத்து இருட்டு படத்தை எடுத்த விஇஸட் துரை இயக்குகிறார். படத்தை தயாரிப்பது ரைட் ஐ தியேட்டர்ஸ். கிச்சா படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்

  • News18
  • 17

    பூஜையுடன் தொடங்கிய தலைநகரம் 2 - படங்கள்!

    சுந்தர் சி. நடித்த தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கியது. 

    MORE
    GALLERIES

  • 27

    பூஜையுடன் தொடங்கிய தலைநகரம் 2 - படங்கள்!

    மினிமம் கியாரண்டி இயக்குனராக பெயரெடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என பல பேட்டிகளில் சொன்னவர் சுந்தர் சி. அவர் விரும்பியபடி, அவர் இயக்கும் படங்கள் மினிமம் வசூலை பெற்று தமிழின் மினிமம் கியாரண்டி இயக்குனராக பெயரெடுத்தார். அவ்வப்போது உள்ளத்தை அள்ளித்தா போன்று மெகா ஹிட்களும் அமையும்.

    MORE
    GALLERIES

  • 37

    பூஜையுடன் தொடங்கிய தலைநகரம் 2 - படங்கள்!

    இயக்குனர் வாழ்க்கை நல்லபடியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், தனது மனைவி குஷ்புவின் ஆசையை நிறைவேற்ற நடிகர் அவதாரம் எடுத்தார் சுந்தர் சி. அவர் நாயகனாக அறிமுகமான முதல் படம் தலைநகரம்.

    MORE
    GALLERIES

  • 47

    பூஜையுடன் தொடங்கிய தலைநகரம் 2 - படங்கள்!

    2006 இல் வெளியான இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க, சுந்தர் சி.யின் உதவி இயக்குனர் சுராஜ் இயக்கினார். வடிவேலின் நாய் சேகர் கதாபாத்திரம் படத்தை காப்பாற்றியது.

    MORE
    GALLERIES

  • 57

    பூஜையுடன் தொடங்கிய தலைநகரம் 2 - படங்கள்!

    அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சுந்தர் சி. தொடர் தோல்விகளுக்குப் பின், நடிப்புக்கு இடைவெளிவிடுவதாகக் கூறி கலகலப்பு படத்தை இயக்கினார். ஆனாலும், அவ்வப்போது திரைப்படங்களில் தலைகாட்டி வந்தவர், தற்போது தலைநகரம் 2 படத்தில் நாயகனாகியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 67

    பூஜையுடன் தொடங்கிய தலைநகரம் 2 - படங்கள்!

    இந்த இரண்டாம் பாகத்தில் சுந்தர் சி. தவிர அனைவரும் புதியவர்கள். படத்தை சுந்தர் சி. யை வைத்து இருட்டு படத்தை எடுத்த விஇஸட் துரை இயக்குகிறார். படத்தை தயாரிப்பது ரைட் ஐ தியேட்டர்ஸ். கிச்சா படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

    MORE
    GALLERIES

  • 77

    பூஜையுடன் தொடங்கிய தலைநகரம் 2 - படங்கள்!

    இன்று நடந்த பூஜையில் படத்தின் நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர், வி கிரியேஷன்ஸ் தாணு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தலைநகரம் 2 மூலம் மீண்டும் நடிப்பை முதன்மையாக்கிக் கொண்டாரா சுந்தர் சி. என்ற அச்சம் ரசிகர்களிடம் இருக்கவே செய்கிறது.

    MORE
    GALLERIES