அந்தரம் படத்திற்காக கேரள அரசின் 2021-ம் ஆண்டுக்கான சினிமா விருது கிடைத்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த திருநங்கை நேகாவுக்கு. அவர் நம்மிடம் பகிர்ந்துக் கொண்ட விஷாங்களை பதிவிடுகிறோம். அந்தரம் படத்துக்கு விருது கிடைத்த தனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து அறிக்கையைப் பார்த்தபோது இதயம் துடிப்பதை நிறுத்தி, மீண்டும் துடித்ததாக திருநங்கை நேகா தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், ”அந்தரம் படத்திற்காக விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. திருநங்கைகளின் பிரச்சனைகள் குறித்த கதை தான் அந்தரம் படம். இதன் மூலம் அரசின் திரைப்பட விருது பெறும் முதல் திருநங்கையாக மாறியிருக்கிறேன். கேரளாவில் விருது கிடைத்ததை அறிந்து தமிழக முதல்வர் எனக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. அதைப் பார்த்தபோது என் இதயம் துடிப்பதை நிறுத்தி மீண்டும் துடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. சமூகத்தில் தூக்கி வீசப்பட்ட எனக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம். மாஸ்-கிளாஸ் கலந்த அஜித்தின் துணிவு செகண்ட் லுக் போஸ்டர்! Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்புகிறேன். சூழ்நிலை சரியாக அமைந்தால் மகிழ்ச்சி. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பேன்” என்றார்.