"நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஒரு பழைய சன் டிவி சீரியலில் நடித்து இருக்கிறார்!" என்று கூறினால் யாரும் ஷாக் ஆக மாட்டீர்களா? - அப்போதும் பரவாயில்லை. ஏனெனில், டிவியில் அறிமுகமாகி பின்னர் சினிமாவில் பிரபலங்களாக உருமாறிய தமிழ் நடிகர், நடிகைகள் பட்டியலில் விஜய் சேதுபதி மட்டும் இல்லை, நீங்கள் கற்பனை கூட செய்து பார்த்திராத பல நடிகர் நடிகைகள் உள்ளன. அவர்களின் பெயர்களை சொன்னால் நம் பலரின் புருவங்கள் உயரும்!
சமுத்திரக்கனி:சமுத்திரக்கனி ஓரு இயக்குனராக கோலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன், தன் நடிப்பு திறனை பல டிவி சீரியல்களில் வெளிப்படுத்தி உள்ளார். சமுத்திரக்கனி முதல் முதலில் நடித்தது கே.பாலசந்தரின் ரமணி Vs ரமணி சீரியலில் தான், பிறகு சன் டிவியின் அரசி மற்றும் ஜெயா டிவியின் அன்னி சீரியலிலும் இவர் நடித்து உள்ளார்.
விஜய் சேதுபதி: சினிமாவில் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காத நேரத்தில், அதாவது 2006-ல் சன் டிவியில் ஒளிபரப்பான பெண் என்கிற டிவி சீரியலில் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். தவிர கலைஞர் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் டீமில் ஒரு அங்கமாகவும் இருந்தார் விஜய் சேதுபதி.
சின்னக்கலைவானர் விவேக்: நகைச்சுவை நடிகர் விவேக் 1993-இல் ஒரு சில படங்களில் நடத்த பின்னர் 'டாப் டக்கர்' என்கிற டிவி ஷோவில் தோன்றினார். மேலும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் 'டாப் டக்கர்' நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களுக்கு புதுமுக இயக்குனர் ஒருவரையும் விவேக்கே அறிமுகம் செய்து வைத்தார் - அவர்தான் ரமேஷ் கண்ணா!