2021 ஆம் ஆண்டு வெளியான 'காதம்பரி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் அகிலா நாராயணன். இந்த படமானது இயக்குனர் அருள் இயக்கி,நாயகனாகவும் நடித்து வெளிவந்தது. அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர் கலைத்துறை மீதுள்ள ஆர்வத்தினால் தனது சொந்த முயற்சியால் திரைத்துறையில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக பல மாதங்களாக அமெரிக்க இராணுவப் போர்ப் பயிற்சியை பெற்றுவந்த அகிலா நாராயணன் தற்போது வெற்றிகரமாக அமெரிக்க ராணுவ வீரர்களின் சட்ட ஆலோசகராக இணைந்துள்ளார். மேலும் தனது குடும்பத்தினரின் ஆதரவோடு அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ள அகிலா நாராயணன் அமெரிக்க இராணுவத்திற்கு சேவை செய்வதை தனது கடமையாக கருதுகிறார்.
அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெயரையும் பெற்றுள்ளார் அகிலா நாராயணன். சினிமாவை விட்டுவிட்டு அமெரிக்க இராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை அகிலாவின் புகைப்படங்கள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவரது இந்த சேவை மனப்பான்மைக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.