

சங்கத்தமிழன் தீம் இசை, தளபதி 65 இயக்குநர் யார்?, கைதி 100 கோடி வசூல் போன்ற சினிமா செய்திகளை பார்க்கலாம்


விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ராசி கண்ணா நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படத்தில் இருந்து தீம் இசையை படக்குழு வெளியிட்டுள்ளது. வருகின்ற, நவம்பர் 15ம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 64 திரைப்படத்தை அடுத்து, அவரின் 65-வது படத்தின் இயக்குனர் யார் என்ற தேடலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாத இறுதிக்குள் விஜய் 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விடும் என்பதால், 2020-ம் ஆண்டு தீபாவளி-க்கு விஜயின் 65வது திரைப்படத்தை வெளியிட அவர் ஆர்வம் காட்டியுள்ளார். ஏற்கனவே, தொடர்ச்சியாக மெர்சல், சர்க்கார், பிகில் ஆகிய படங்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று வெளியாயின.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த மைல் கல்லை எட்டும் கார்த்தியின் முதல் படம் என்ற சாதனையை கைதி படைத்துள்ளது. கதாநாயகி பாடல்கள் என வர்த்தக சமரசம் எதுவும் இல்லாமல் வெளியான இந்தப் படம்,100 கோடி ரூபாய் வர்த்தகத்தை கடந்திருப்பது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.


முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு மலையாள படத்திற்கு இசையமைத்து வருகிறார். "அகு ஜீவிதம்" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிருத்திவிராஜ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்காக ஏ ஆர் ரகுமான் இசையில், இதுவரை விஜய் யேசுதாஸ் மட்டும் ஒரு பாடலை பாடியுள்ளார்.