'லேடி சூப்பர் ஸ்டார்' என தமிழ் சினிமா கொண்டாடும் கனவு தேவதை நயன்தாரா. இவரின் திரைப்பயணம் குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
2/ 9
கதாநாயகர்களின் பெயரால் மட்டுமே ஒரு திரைப்படம் மக்களிடம் போய்ச் சேர்ந்ததை மாற்றி கதாநாயகியின் பெயராலும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் என்பதை நிரூபித்த மாயக்காரி நயன்தாரா.
3/ 9
சரத்குமாரோடு 'ஐயா' திரைப்படத்தில் அறிமுகமாகி அடுத்த திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடி ஆனார் நயன்தாரா.
4/ 9
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'கஜினி' இவருக்கு வேறொரு அடையாளத்தை தேடிக்கொடுத்தது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கதாநாயகர்களின் முதல் சாய்ஸ் நயன்தாரா என்றானது.
அஜித்தின் பில்லாவில் ஒரு ஹாலிவுட் நாயகி போல் நயன்தாரா அவதாரமெடுத்ததை பார்த்து மிரண்டு கிறங்கி தவித்தது தமிழ் சினிமா. 'எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்' என பார்வையாளர்களை ஏங்க வைத்தது. தனுஷுடன் இவர் நடித்த 'யாரடி நீ மோகினி'.
7/ 9
அடுத்து அஜீத் விஜய் சூர்யாவின் ஏகன் வில்லு ஆதவன் திரைப்படங்கள் நயன்தாராவால் வண்ணமாகி 'வாராயோ வாராயோ மோனாலிசா' என வெல்வெட் கம்பளம் விரித்தது தமிழ் சினிமா.
8/ 9
நயன்தாராவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'மாயா' திரைப்படம் அவரை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது. ரசிகர்களோ இவருக்கு கட் அவுட் வைக்க தமிழ் சினிமாவோ இவரை லேடி சூப்பர் ஸ்டாராக்கியது.
9/ 9
காதம்பரியாக 'நானும் ரவுடிதான்'… மற்றும் சோலோ ஹீரோயினாக இவர் நடித்த 'டோரா', 'அறம்' ,'ஐரா' 'கோலமாவு கோகிலா', 'மூக்குத்தி அம்மன்', 'நெற்றிக்கண்' போன்ற திரைப்படங்கள் இவரை மீண்டும் நம்பர் ஒன் நாயகியாக்கியது என்றால் மிகையல்ல....