ஜனவரி 5: எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, யுவன் ஷங்கர் ராஜா என பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடல் எழுதியுள்ள பிரபல பாடலாசிரியர் காமகோடியான் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார்.
2/ 21
பிப்ரவரி 7: மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் என்ற வேடத்தில் நடித்த பிரவீன்குமார் சோப்தி தனது 74 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
3/ 21
பிப்ரவரி 22: காதலுக்கு மரியாதை, கிரீடம் போன்ற தமிழ் படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி.லலிதா தனது 74 வயதில் கல்லீரல் பிரச்னை காரணமாக மரணமடைந்தார். இவர் தமிழில் தேவர் மகன் படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் பரதனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
4/ 21
ஏப்ரல் 8: கண்ணம்மா, என் இதயராணி, பொம்மை நாய்கள், அதிர்ஷ்டம் போன்ற படங்களை இயக்கிய எஸ்.எஸ். பாபாவிக்ரம் தனது 80வது வயதில் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார்.
5/ 21
ஏப்ரல் 23: பழம்பெரும் நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
6/ 21
ஏப்ரல் 28: வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக மிரட்டிய சலீம் கவுஸ் தனது 70வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
7/ 21
ஏப்ரல் 29: நடிகை ரங்கம்மாள் பாட்டி (83) உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
8/ 21
மே 22: தயாரிப்பாளர் ஏக்நாத் தனது 78வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
9/ 21
மே 22: தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிஸ்டர் ரோமியோ படத்தின் தண்ணீரை காதலிக்கும் போன்ற பல பாடல்களைப் பாடிய சங்கீதா சஜித் சிறுநீரக பிரச்னை காரணமாக மரணமடைந்தார்.
10/ 21
ஜூன் 1: தமிழில் பல ஹிட் பாடல்கள் பாடியுள்ள பின்னணி பாடகர் கே.கே. என்ற கிருஷ்ணகுமார் தனது 53வது வயதில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
11/ 21
ஜூன் 27: தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 'பூ' ராமு மாரடைப்பால் மரணமடைந்தார்.
12/ 21
ஜுலை 11: அவன் - இவன் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ராமராஜ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
13/ 21
ஜூலை 15: பிரபல இயக்குநரும் நடிகருமான பிராதப் போத்தன் தனது 70வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
14/ 21
ஜூலை 18: தமிழில் இளையராஜா இசையில் நண்டு படத்தில் பாடிய பாலிவுட் பாடகர் பூபிந்தர் சிங் 82 வயதில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார்.
15/ 21
செப்டம்பர் 2: புல்லினங்கால், சிம்டாங்காரன் போன்ற பல ஹிட் பாடல்களைப் பாடிய பின்னணி பாடகர் பம்பா பாக்யா 48 வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
16/ 21
செப்டம்பர் 18: வாய்தா, துப்பறிவாளன் ஆகிய படங்களல் நடித்த தீபா என்ற பவுலின் 29 வயதில் காதல் தோல்வி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
17/ 21
செப்டம்பர் 26: அனிருத்தின் தாத்தாவும் இயக்குநருமான எஸ்.வி.ரமணன் 87வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
18/ 21
நவம்பர் 15: தெலுங்கு சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவரும் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா 80வது வயதில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
19/ 21
டிசம்பர் 1: அன்பே சிவம், பகவதி, உன்னை நினைத்து போன்ற பல படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளிதரன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
20/ 21
டிசம்பர் 3: வெண்ணிலா கபடி குழு திரைப்படப் புகழ் நடிகர் ஹரி வைரவன் 32 வயதில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
21/ 21
டிசம்பர் 24: மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள மாயி சுந்தர் தனது 50வது வயதில் மரணமடைந்தார்.