

பின்னணி பாடகியும் பிக்பாஸ் பிரபலமுமான ரம்யா தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


400க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியிருக்கும் ரம்யா, கடந்த 2018-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.


ரம்யாவுக்கும் மன்னர் வகையறா படத்தில் நடித்த நடிகர் சத்யாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.


ரம்யா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் ரம்யா, “கடந்த சில நாட்களாகவே என்னிடம் நிறைய பேர் நீங்கள் ஏன் இவ்வளவு திடீரென உடல் எடை அதிகரித்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்ட இந்த கேள்விக்கு நான் இப்போது பதில் கூறுகிறேன். நான் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளேன் என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதனால்தான் எனது உடல் எடை கூறியது. இனிமேல் எனது உடல் நலத்தை பேணி, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடல் எடையை குறைக்க போகிறேன்”என்று கூறியுள்ளார்.