முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு... இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு... இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

கே.விஸ்வநாத்தின் கலைப் படைப்புகள் அவரது காலத்தையும் தாண்டியும் பேசப்படும், இப்படிக்கு உங்களின் தீவிர ரசிகன் - கமல்ஹாசன்

 • 19

  இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு... இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

  கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்வையும், கலையின் அழியா தன்மையும் முழுமையாக புரிந்துகொண்டவர். விஸ்வநாத்தின் கலைப் படைப்புகள் அவரது காலத்தையும் தாண்டியும் பேசப்படும், இப்படிக்கு உங்களின் தீவிர ரசிகன் கமல்ஹாசன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 29

  இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு... இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

  நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இயக்குநர் கே.விஸ்வநாத் இறுதி சடங்கில் கனத்த மனதுடன் கலந்துகொண்டேன். இவருக்கு நிகர் யாரும் இல்லை. திரையுலகில் வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறார். இன்று தெலுங்கு சினிமா சர்வதேச அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது. ஆர்ஆர்ஆர் படத்துக்கு நன்றி. ஆனால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் கே.விஸ்வநாத். அவர் தெலுங்கு சினிமாவை கலாச்சாரம், இசையுடன் வடிவமைத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 39

  இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு... இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

  சிரஞ்சீவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயக்குநர் கே.விஸ்வநாத் தெலுங்கு சினிமாவில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை  விட்டு சென்றிருக்கிறார். இந்தியா மற்றும் தெலுங்கு சினிமாவுக்கும் எனக்கும் தனிப்பட்ட இழப்பு. தனித்துவமான, காலத்தை கடந்த படைப்புகளைக் கொடுத்தவர். இவர் என்றும் வாழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 49

  இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு... இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

  குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், நாம் மற்றொரு கலைஞரை இழந்துவிட்டோம். அவரது கலைக்காகவும் சினிமா மீதான அவர் கொண்ட காதலுக்காகவும் இயக்குநர் கே.விஸ்வநாத் என்றும் நினைவு கூறப்படுவார். அவர் படத்தில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவரது படங்களுக்கு சிறந்த ரசிகை. என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 59

  இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு... இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

  பாலிவுட் நடிகர் அனில் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், கே.விஸ்வநாத் ஜி எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள். உங்களுடன் ஈஸ்வர் பட படப்பிடிப்புத் தளத்தில் இருந்தது கோவிலில் இருந்ததைப் போல உணர்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 69

  இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு... இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

  நடிகர் அர்ஜுன் தனது ட்விட்டர் பதிவில், கலைக்கான அர்த்தத்தை புரியவைத்தவர். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் திரைப்படங்கள் வழியாக வெளிப்படுத்தியவர். புகழ்மிக்க இயக்குநர். சிறந்த நடிகர். நம் கே.விஸ்வநாத் என்றும் வாழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 79

  இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு... இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

  நடிகர் ராம் சரண் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், சிறந்த கலைஞரை இழந்துவிட்டோம். கே.விஸ்வநாத், நீங்கள் எங்கள் மனதிலும் கலையின் மூலமாகவும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 89

  இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு... இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

  இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், சார் நீங்கள் எப்பொழுதும் நினைவுகூறப்படுவீர்கள். எக்காலத்துக்குமான சிறந்த திரைப்பட இயக்குநர். இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 99

  இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு... இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

  மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், கலாச்சாரத்தையும் சினிமாவையும் அழகாக இணைத்த மேதை. இவரது தாக்கம் சினிமாவைக் கடந்தும் தொடரும். என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES