"நான் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என நிறைய நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் சிம்புவுடன் மட்டும் தான் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகவில்லை" என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால், சிம்புவுடன் மட்டும் தான் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகவில்லை என்று தமன்னா கூறியிருக்கிறார்.
2/ 11
தமன்னா தமிழில் கடைசியாக 2019 இல் வெளியான விஷாலின் ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அவரது நடிப்பில் எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. இதுவரை எந்த தமிழ்ப் படத்திலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.
3/ 11
நடுவில் நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் மட்டும் வெளியானது. தெலுங்கு, இந்தியில் தொடர்ந்து நடித்து வரும் தமன்னா தனது சமீபத்திய பேட்டியில் சிம்பு குறித்து குறிப்பிட்டுள்ளார்.
4/ 11
"நான் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என நிறைய நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் சிம்புவுடன் மட்டும் தான் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
5/ 11
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைக்கேல் ராயப்பன் தயாரித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.
6/ 11
வயதான தோற்றத்தில் வரும் சிம்புவை காதலிக்கும் வேடம். அதைத்தான் தமன்னா குறிப்பிட்டு, சிம்புவுடனான கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகவில்லை என்று கூறியுள்ளார்.
7/ 11
இதற்காக தமன்னா வருத்தப்பட தேவையில்லை. அந்த படமே ஒர்க்கவுட் ஆகவில்லை. தாட்டியான தோற்றத்தில், நரைத்த தலைமுடியுடன் வந்த சிம்புவை அவரது ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.
8/ 11
கிட்டத்தட்ட 18 கோடிகள் அந்தப் படத்தால் நஷ்டம் என மைக்கேல் ராயப்பன் புகார் தெரிவித்திருந்தார். இந்த பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை என்பது முக்கியமானது.
9/ 11
இந்தத் தகவலை வெளியிட்டு இருக்கும் தமன்னா, சிம்புவுடன் மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்புக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
10/ 11
ஈஸ்வரன் திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவின் நடத்தையில் நிறைய மாற்றங்கள். இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் தொங்கலில் விடாமல் கொடுத்த கால்ஷீட்படி நடித்து வருகிறார்.
11/ 11
அவரது நடிப்பில் விரைவில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாக உள்ளது. இது தவிர பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.