1980 இல் வெளியான டி.ஆரின் முதல் படம் ஒருதலை ராகம் ஒரு வருடம் ஓடியது. அந்தப் படத்தின் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால், டிஆரின் பெயரை போடாமல் தயாரிப்பாளர் தன் பெயரை போட்டுக் கொண்டார். இரண்டாவது படம் வசந்த அழைப்புகள் சுமாராகவே போனது. அடுத்து ரயில் பயணங்களில் திரைப்படம் 175 நாள்கள் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. அடுத்து எடுத்த நெஞ்சில் ஒரு ராகம் ஓடவில்லை.
1. உயிருள்ளவரை உஷா (1983); இந்தப் படத்தை வாங்க முதலில் விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றும், படம் ஓடுமா என்ற தயக்கம் இருந்தது. பத்திரிகைகள் சுமாரான படம், ஒருதலை ராகத்தின் ஹேங்ஓவர் என்றெல்லாம் எழுதின. எதிர்மறை விமர்சனங்களை பறக்கவிட்டு படம் 175 நாள்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. நளினி இந்தப் படத்தில்தான் முதல்முறை நாயகியாக நடித்தார். வைகைக்கரை காற்றே நில்லு போன்ற பிரமாதமான பாடல்களை டிஆர் தந்திருந்தார்.
2. தங்கைக்கோர் கீதம் (1983): உயிருள்ளவரை உஷா வெளியான அதே வருடம் தீபாவளிக்கு தங்கைக்கோர் கீதம் வெளியானது. ஆனந்தபாபுவின் நடனத்திறமையை வெளிக்கொண்டு வந்த சில படங்களில் இதுவும் ஒன்று. தினம் தினம் உன்முகம்..., தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி..., தங்க நிலவே உன்னை உருக்கி..., தஞ்சாவூரு மேளம் என அனைத்துப் பாடல்களும் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தன. வாடா என் மச்சி, வாழைக்காய் பஜ்ஜி, உன் உடம்பை பிச்சி, போட்டுடுவேன் பஜ்ஜி... என்று அடுக்குமொழி பேசியபடி டிஆர் போடும் சண்டை அன்றைய ஹுஸ்பம்ப் காட்சி.
4. மைதிலி என்னை காதலி (1986): 1985 இல் டி.ஆர். இயக்கிய படங்கள் எதுவும் வரவில்லை. பூக்களை பறிக்காதீர்கள் உள்பட மூன்று படங்கள் அவரது இசையில் வெளிவந்தன. 1986 இல் மைதிலி என்னை காதலி வெளியானது. அமலா நாயகியாக தமிழில் அறிமுகமான படம். அட பொன்னான மனசே.., எங்கும் மைதிலி..., என் ஆசை மைதிலியே..., கண்ணீரில் மூழ்கும் ஓடம்..., ஒரு பொன் மானை நான் தேடி..., ராக்கால வேளையில..., நானும் உந்தன் உறவை... உள்பட அனைத்துப் பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. படமும் மெகா ஹிட். சென்னையில் வெளியான ஐந்து திரையரங்குகளில் நான்கில் 100 நாள்கள் ஓடியது.
5. ஒரு தாயின் சபதம் (1947): சுபாஷ் கையின் மேரே ஜங்க் திரைப்படத்தை மேலோட்டமாக தழுவி ஒரு தாயின் சபதத்தை டி.ஆர். எடுத்தார். படத்தின் கோர்ட் ட்ராமா எடுப்பட்டதால் படம் வெற்றி பெற்றது. ராக்கோழி கூவையில..., எனது கானம்..., அமமாடியோ ஆத்தாடியோ..., போட்டேனே மூணு முடிச்சி.. உள்பட அனைத்துப் பாடல்களும் ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டன. 100 நாள்களைக் கடந்து படம் ஓடியது.
6. என் தங்கை கல்யாணி (1988): டிஆரின் மற்றுமொரு பிளாக் பஸ்டர் வெற்றிப் படம் என் தங்கை கல்யாணி. சிலம்பரசனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் 200 நாள்களை கடந்து ஓடி சாதனைப் படைத்தது. வழக்கம் போல் பாடல்களுக்காக ரசிகர்கள் பலமுறை படத்தைப் பார்த்தனர். சிலம்பரசனுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது.
7. சம்சார சங்கீதம் (1989): என் தங்கைக் கல்யாணிக்குப் பிறகு சிலம்பரசனை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்ற படம், சம்சார சங்கீதம். டிஆர், ரேணுகாவுடன் சிலம்பரசனுக்கு முக்கியமான வேடம். ஐ யாம் ஏ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என்று சிறுவன் சிம்பு ஆடிப்பாடியதை தமிழகம் ரசித்தது. படம் 100 நாள்களை கடந்து ஓடியது. எழுதி, இயக்கி, இசையமைத்து, பாடல்கள் எழுதி, ஒளிப்பதிவு செய்து, நடித்து 7 தொடர் வெற்றிகளைப் பெற்ற ஒரே கலைஞர் டி.ராஜேந்தர் மட்டுமே. இந்த சாதனையை இனிவரும் தலைமுறையிலும் யாரும் முறியடிக்க வாய்ப்பில்லை. இந்த 7 படங்களின் பெயர்கள் அனைத்தும் ஒன்பது எழுத்துக்களில் அமையப் பெற்றவை என்பது இன்னொரு சிறப்பு.