பாலிவுட்டில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார் ஸ்வரா பாஸ்கர். அரசியல் ரீதியான கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஸ்வரா பாஸ்கர். தனுஷின் ராஞ்சனா படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்வரா பாஸ்கர் நடித்திருந்தார். தமிழில் இந்தப் படம் அம்பிகாவதி என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவருக்கும் பகத் அஹ்மத் என்ற இளம் அரசியல் தலைவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சர்ச்சை வெடித்தது. சர்ச்சை பற்றி கவலைப்படாமல் திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். இதில் உச்சகட்டமாக தனது முதல் இரவுக்காக தயார் செய்யப்பட்ட அறையின் புகைப்படத்தையும் ஸ்வரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதிர்ச்சியளித்திருக்கிறார். முதலிரவு அறையை தனது அம்மா ரோஜா மலர்களால் அலங்கரித்துள்ளதாக ஸ்வரா பகிர்ந்துள்ளார்.