மாரடைப்பிலிருந்து மீள தனக்கு உடற்பயிற்சி பெரிதளவில் உதவி புரிந்ததாக நடிகை சுஷ்மிதா சென், இன்ஸ்டகிராம் நேரலையில் தெரிவித்துள்ளார். நடிகை சுஷ்மிதா சென், தான் சமீபத்தில் மாரடப்பால் பாதிக்கப்பட்டது குறித்து இன்ஸ்டகிராம் நேரலையில் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். முக்கிய தமனியில் 95% அடைப்புடன் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாக அவர் பகிர்ந்துக் கொண்டார். ”இவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து நான் மீண்டதற்கு உடற்பயிற்சி தான் காரணம். உங்களில் பலர் ஜிம்முக்கு செல்வதை நிறுத்தியிருக்கலாம். ஆனால் எனக்கு மாரடைப்பிலிருந்து மீள எனக்கு உடற்பயிற்சி தான் பெரிதளவில் பலனளித்தது. மாரடைப்பு ஆண்களுக்கு மட்டும் தான் வரும் என நினைக்க வேண்டாம், அது பெண்களையும் தாக்கும். அதனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், தமிழில் ரட்சகன் படத்தில் ஹீரோயினாகவும், முதல்வன் படத்தில் வரும் ‘சக்கலக்க பேபி’ பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார்.