ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. அண்ணாத்த படத்திற்கு பின்னர் ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் சிறைத்துறை உயர் அதிகாரி கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார். ஜெயிலருக்கு பின்னர் எந்த இயக்குனருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேலுடன் ரஜினி இணைவார் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. ஞானவேல் – ரஜினி படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெய் பீம் படத்தைப் போன்று ரஜினி – ஞானவேல் இணையும் படமும் உண்மை சம்பவங்களை பின்னணியாக கொண்டது என்று கூறப்படுகிறது. ஜெய் பீம் படம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அந்த படத்தின் இயக்குனருடன் ரஜினி இணைவது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.